யாழ்ப்பாணத்தில் கசிப்பு காய்ச்சும் இடமொன்றினை முற்றுகையிட்ட பொலிஸார் சுமார் ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களை மீட்டுள்ளதுடன் , அங்கிருந்த நபர் ஒருவரையும் பெருந்தொகை கசிப்புடன் கைது செய்துள்ளனர், tamilnews1
மானிப்பாய் பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அவ்விடத்தினை முற்றுகையிட்டனர்.
அதன் போது அங்கிருந்து பெருந்தொகையான கசிப்பை மீட்ட பொலிஸார் , கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் ஒரு இலட்ச ரூபாய்க்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர். tamilnews1
அதேவேளை கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். tamilnews1 tamilnews1
கைது செய்யப்பட்டநபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். tamilnews1
No comments