மன்னார் வைத்தியசாலையில் மருத்துவர் மற்றும் தாதியர்களின் கவனயீனத்தால் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
வவுனியா பனிக்கர் பகுதியை சேர்ந்த எஸ் சுதன் (வயது 26) எனும் இளைஞனே தனது உயிரை மாய்த்துள்ளார்.
உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டார் அவரை காப்பாற்றி வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
மன்னார் வைத்தியசாலையில், கடந்த மாதம் குழந்தை பிரசவித்த சிந்துஜா எனும் பெண், குழந்தை பெற்ற சில நாட்களின் பின்னர் இரத்த போக்கால் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு வைத்தியர் , தாதியர்கள் உரிய சிகிச்சை அளிக்காது, கவனயீனமாக செயற்பட்டமையால் , அப்பெண் உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் உயிரிழப்பு தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என மக்கள் போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில் வைத்தியர் தாதியர்கள் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அப்பெண்ணின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவரது கணவர் தனது உயிரை மாய்த்துள்ளார்.
No comments