ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தந்த விரிவுரையாளர்களினால் நேற்றைய தினம் ஹொட்டேல் மனேஜ்மெண்ட், தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த கற்கை நெறிகள் யாழ்ப்பாணம் கோண்டாவிலில் அமைந்துள்ள Betta College International ல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கலாநிதி விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் Betta College International இன் பணிப்பாளர், ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கற்கை நெறிகளில் இணைந்து கொள்வதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் நேர்முகப்பரீட்சையில் நேற்று பங்கேற்றனர்.
வேலைவாய்ப்பை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தக்கற்கை நெறிகள் கே.கே.வீதி கோண்டாவிலில் அமைந்துள்ள Betta College International ல் தொடர்ந்து நடைபெறவுள்ளதுடன், விரிவுரைகள் ஐரோப்பிய நாடுகளில் இருந் வருகை தந்துள்ள விரிரையாளர்களினால் நடாத்தப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.
அரசினால் அங்கீகரிக்கப்பட்ட, UK Edcat நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட EPELTS ஆங்கிலக் கற்கைநெறியும் இவர்களால் கற்பிக்கப்படும்.
அத்துடன், northern provincial Tourism Bureau வினால் அங்கீகரிக்கப்பட்ட Area Tour Guide, Certificate in Professional hottel management, Certificate in Travel and Tourism போன்ற கற்கை நெறிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
மேலதிக விபரங்களிற்கு Betta College International இன் 077 - 7692 139 மற்றும் 076 - 1241 561 ஆகிய தொலைபேசி இலக்கங்களிற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்
No comments