Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நாட்டின் சாபக்கேடு!


”நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை  இல்லாதொழிப்பதாகக்கூறி ஆட்சிக்கு வந்த எவரும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை” என ஜனாதிபதி வேட்பாளர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது 

”இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனக் கூறியே சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க ஆட்சிக்கு வந்தனர்.

ஆனால் அதற்கான எந்தநடவடிக்கையினையும் அவர் எடுக்கவில்லை.அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கு குறைந்தபட்சம் பிரேரனையொன்றினையேனும் முன்வைக்க அவர்களால் இயலவில்லை.

அதேபோல் 2015 ஆம் ஆண்டு மைத்ரி -ரணில் ஆட்சிக்கு வந்தபோதும் நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறைமையினை இல்லாதொழிப்பதாக கூறினர். அதனை செய்யவில்லை.

1977 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டிற்கு சாபக்கேடாகவே நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறைமை காணப்படுகின்றது என ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

No comments