நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்ட தேயிலை மலையில் தேயிலை பறித்து கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (15) வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கீழ்ப்பிரிவு தோட்ட தேயிலை மழையில் மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் 7 பேரும் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் குறித்த அச்சமடைய தேவையில்லை என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
No comments