யாழ்ப்பாணத்தில் கார் மோதி படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இருபாலை கிழக்கை சேர்ந்த மார்க்கண்டு பாலசுப்பிரமணியம் (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார்
யாழ் . நகர் பகுதியில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக கடமையாற்றி வந்த குறித்த முதியவர் கடந்த 25ஆம் திகதி தனது இரவு கடமையை நிறைவு செய்த பின்னர் காலை வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை வீட்டிற்கு அருகில் வீதியை கடக்க முற்பட்ட வேளை கார் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்






No comments