இலங்கையில் உள்ள அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகளையும் இன்றைய தினம் திங்கட்கிழமை தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல் ரத்நாயக்க அழைத்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் அமைச்சர் மட்டத்தில் அமைச்சின் செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான பின்னணியை உருவாக்கும் நோக்கில் இந்த சந்திப்புகள் நடத்தப்படுவதாக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
No comments