Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ரணிலின் ஆயுட்காலம் தேர்தலுடன் நிறைவடையும்


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் ஆயுட்காலம் செப்டெம்பர் 21 ஆம் திகதியுடன் நிறைவடையும். தேசியத்தை கருத்திற் கொள்பவர்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும்  என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்ற சர்வஜன சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு எதிராக செயற்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியாக செயற்பட்டோம்.

எமக்கும் சுயநல நோக்கங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட முடியும். ஆனால் ஒருபோதும் நாங்கள் அவ்வாறு செயற்படவில்லை.

2019 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையை பலவீனப்படுத்தக் கூடாது என்பதற்காகவே 7 அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து சர்வஜன சக்தி என்ற புதிய அரசியல் பரிணாமத்தை தோற்றுவித்துள்ளோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் ஆயுட்காலம் எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதியுடன் நிறைவடையும், 

அவருக்கு ஆதரவு வழங்க சென்றுள்ளவர்களின் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

பிரதான வேட்பாளர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் எவரும் தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுவதாக குறிப்பிடவில்லை.

தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் அனைத்து தரப்பினரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும். பொருளாதார கொள்கை தொடர்பில் பிரதான வேட்பாளர்கள்  என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களிடம் பகிரங்க விவாதத்துக்கு நாங்கள் தயார் என்றார்

No comments