தங்காலை பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தங்காலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 08 ஆம் திகதி தனது கடமைகளை முடித்து விட்டு மீண்டும் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது தனது சகோதரனுடன் தகராறில் ஈடுபட்ட நபர்களை விசாரிப்பதற்குச் சென்றுள்ளார்.
இதன்போது, அந்நபர்கள் இந்த பொலிஸ் கான்ஸ்டபிளையும் சகோதரனையும் பொல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிளும் சகோதரனும் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலை மேற்கொண்ட நபர்களில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் அயல் வீட்டார் ஒருவரும் காணப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
No comments