Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

எனது கருத்துக்களை சில ஊடகங்கள் திரிவுபடுத்துகின்றன - சி.வி கவலை


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தொடர்பில் நான் தெரிவித்திருந்த கருத்துக்கள் பற்றி தவறான பிரச்சாரங்கள் செய்யப்படுவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கேள்வி பதிலிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தும் போது ஒட்டு மொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்குே தமது வாக்குகளை அளிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. 

விருப்பு வாக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்ட விடயம். இது தொடர்பில் அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இன்னாருக்கு தான் தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்கிளை அளிக்க வேண்டும் என்று நான் எந்த கோரிக்கையினையோ அல்லது ஆலோசனையோ முன்வைக்கவில்லை. 

பல கேள்விகள் பத்திரிகையாளர்களினால் முன்வைக்கப்படும் போது எமது அடிப்படை குறிக்கோள்களை நாங்கள் சிதைத்திருப்பதாக எனது பதில்களை திரித்து வெளியிடும் பழக்கம் சில ஊடக சகோதரர்களுக்கு உண்டு என்பதைக் காணமுடிகின்றது.

ஆனால் அவை என்னுடைய கருத்துக்கள் அன்று. நான் சில காலத்திற்கு முன்னர் தேர்தலைப் பிற்போட்டால் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்று கூறியது உண்மைதான். இப்பொழுதும் என்னுடைய அச்சம் இந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்விளைவுகள். எந்த ஒரு சிங்கள வேட்பாளரினாலும் ஐம்பது சதவிகித வாக்குகளைப் பெற முடியாமல் போகும் பட்சத்தில் நாட்டின் அரசியல் நிலை கவலைக்கிடமாகலாம். பல தீய சக்திகள் நாட்டில் குழப்ப நிலையினை ஏற்படுத்த முனையலாம்.

இன்று சீனா தனது படையை இங்கு அனுப்ப இருப்பதாகச் செய்தி வந்துள்ளது. இது சிறுபான்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். பொருளாதார நிலையை பெரிதாகப் பாதிக்கலாம். நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படலாம். வெளிநாட்டு ஊடுருவல்கள் நிலைமையை இன்னும் சீரற்றதாக்கலாம். இவற்றைக் கருத்தில் கொண்டே நான் தேர்தலைப் பிற்போட்டால் நாட்டிற்கு நல்லது என்றேன்.

அதே நேரத்தில் நாட்டின் நலன் கருதி மூன்று முக்கிய வேட்பாளர்களும் இதனை எவ்வாறு வழி நடத்துவது என்று கலந்தாலோசிக்கலாம் என்றும் கூறினேன்.அவ்வாறு கூறியதை மனதில் வைத்துத்தான் சில ஊடகங்கள் நான் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு தமிழ் மக்கள் தமது 2வது விருப்பு வாக்கினை அளிக்க வேண்டும் என்று கூறியதாக தவறாக செய்தி வெளியிட்டிருக்கின்றார்கள்.

நாட்டின் நலன் கருதி நான் கூறியதற்கும் தமிழ் பொது வேட்பாளர் தெரிவில் எனது திடமான முடிவுக்கும் உறவமைத்து கூறியமை பத்திரிகையாளர்களின் ஊகமாகும். தமிழ் பொது வேட்பாளருக்கே தமிழ் மக்கள் தமது முதல் வாக்கிளை அளிக்க வேண்டும். 2ம், 3ம் விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துவது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை. இன்னாருக்கு அதனை அளியுங்கள் என்று எந்தத் தருணத்திலும் நான் கூறவில்லை. கூறமாட்டேன். – என்றார்.

No comments