நவாலி தெற்கு அமெரிக்கன் மிசன் தமிழ்கலவன் பாடசாலையில் சிறுவர் சந்தை செயற்பாடு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலை முதல்வர் அல்பிரட் நிமலகாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பாடசாலையின் ஓய்வுநிலை ஆசிரியை செந்தினி தர்மசீலன் கலந்து கொண்டார்.
இவ் சந்தையில் அயற்பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சூழலில் உள்ள பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இச் செயற்பாட்டின் மூலம் குறித்த பாடசாலை மாணவர்கள் பொருட்களை விற்பனை செய்தல், பொருட்களை கொள்முதல் செய்தல் என்பவற்றில் களநிலை அனுபவத்தை பெற சிறந்த இடமாகவும் இது அமைந்த்து.
No comments