Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புதிதாக நியமனம் பெற்ற 3 தூதுவர்களும் 2 உயர்ஸ்தானிகர்களும்!


இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் நேற்றய தினம் புதன்கிழமை கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.

 நற்சான்றிதழ்களைக் கையளித்த இராஜதந்திரிகளின் பட்டியல் பின்வருமாறு,

1. டயானா மெக்கிவிசீன்(Diana Mickeviciene) – தூதுவர் – லிதுவேனியா குடியரசு

2. டிரின் தி டாம் (Trinh Thi Tam) – தூதுவர் – வியட்நாம் சோசலிசக் குடியரசு

3. மாலர் தன் டைக் (Marlar Than Htaik) – தூதுவர் – மியான்மார்

4. பெர்சி பெட்சன் சந்தா (Percy Patson Chanda) – உயர்ஸ்தானிகர் – சிம்பாப்வே

5. அண்டலிப் எலியாஸ் (Andalib Elias) – உயர்ஸ்தானிகர் – பங்களாதேஷ்

நற்சான்றிதழ்களை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments