தனமல்வில பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை கடந்த ஒரு வருட காலமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 17 பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனமல்வில பிரதான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி அதே பாடசாலையை சேர்ந்த மாணவன் ஒருவனை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த காதலன் மாணவியை தனது நண்பரின் வீட்டிற்கு கடந்த வருடம் அழைத்துச் சென்று, அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதனை தொடர்ந்து வீட்டில் இருந்த மேலும் சில மாணவர்கள் மாணவிக்கு மதுவை குடிக்க வற்புறுத்தி, துஷ்பிரயோகம் செய்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ பதிவு செய்துள்ளனர்.
அதன் பின்னர் குறித்த வீடியோவை காட்டி மாணவர்கள் 2023 ஆம் ஆண்டு முதல் 7 தடவைகள் மாணவியை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 17 என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட ஒழுக்காற்று குழுவிற்கு தெரியவந்த நிலையில், பாடசாலையின் அதிபர் மற்றும் ஒழுக்காற்றுக் குழுவினர், சம்பந்தப்பட்ட மாணவர்களையும் மாணவியையும் அழைத்து விசாரித்து, பாடசாலைக்கு களங்கம் விளைவிக்காத வகையில் சம்பவத்தை மூடி மறைத்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனக்கு நடந்த இந்த கொடுமை மற்றும் வன்முறைகள் குறித்து மாணவி தனது வீட்டின் சுவர்களில் பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments