சர்வசன அதிகார கூட்டணியின் முதலாவது அங்குரார்ப்பண தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
tamilnews1 செய்தி குழுமத்தில் இணைந்து கொள்ள இந்த இணைப்புக்கு செல்லுங்கள்
யாழ்ப்பாணம் றக்கா வீதியில் உள்ள இளங்கதிர் சனசமூக நிலைய மைதானத்தில் குறித்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங்க, காமினி வலேபொட, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத ஜகம்பத் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டனர்.
தாயக மக்கள் கட்சியின் தலைவரான தொழிலதிபர் திலித் ஜயவீர நட்சத்திர சின்னத்தில் இம்முறை சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார்
No comments