Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஜனாதிபதித் தேர்தலில் 40 வேட்பாளர்கள்


2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்றைய தினம் புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

tamilnews1 செய்தி குழுமத்தில் இணைந்து கொள்ள இந்த இணைப்புக்கு செல்லுங்கள் 

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும்  திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, தபால் மூல வாக்குச் சீட்டுக்களை வௌியிடுத்தல் மற்றும் தபாலுக்கு வழங்குதல் எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகங்கள், பொலிஸாருக்கு தபால் மூல வாக்குப்பதிவு செப்டம்பர் 4 ஆம் திகதி இடம்பெறும்

இதேவேளை, தபால் மூலம் வாக்களிக்கக் கோரிய ஏனைய தரப்பினருக்கு செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

குறியிடப்படாத தபால் வாக்குகளுக்கான மறுகுறிப்பு திகதி செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments