Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன ? - அநுர பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்


தமிழ் மக்களிடம் ஆதரவு கோரும் தேசிய மக்கள் சக்தியினர் , தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை வழங்க போகிறார்கள் என்பதனை முழு இலங்கை மக்களுக்கும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் 

மேலும் தெரிவிக்கையில், 

ஊழலற்ற , அதிகார துஸ்பிரயோகமற்ற சமூக கட்டமைப்பை உருவாக்க தனக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என அநுர குமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். 

ஆனால் அவர் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனை என்ன என்பதனை பார்க்காது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பிரச்சனை பற்றி பேசுகின்றனர். முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனை தொடர்பில் முழுமையான பார்வை கொண்டவர்கள் அல்ல. 

ஆட்சி மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை. தமிழர்கள் என்ற காரணத்தால் விபரிக்க முடியாத பாரபட்சத்தை எதிகொண்டவர்கள் நாங்கள். பாரிய கொடிய சட்டங்களால் நசுக்கப்பட்டோம். 30 வருட காலமாக நரக வாழ்க்கை வாழ்ந்தோம் . 

நாங்கள் தமிழ் தேசிய இனம் என்ற அடிபடப்பையில் எமக்கு கிடைத்த உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது தான் போராடினோம்.

யுத்தம் முடியும் வரை ஜே.வி பி யினர் எப்படி செயற்பட்டார்கள் என தமிழ் மக்களுக்கு தெரியும் வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரித்தவர்கள் ஜே.வி .பி யினர் தான் என்பதும்  மக்களுக்கு தெரியும் 

அதனால் இவர்கள் தற்போது ஜே.வி .பி என்பதனை தள்ளி வைத்து விட்டு தேசிய மக்கள் சக்தி என்ற புதிய பெயரோடு வந்துள்ளனர்.

 இந்த அரசியல் கட்சியினருக்கு நாங்கள் ஒரு விடயத்தை சுட்டி காட்ட விரும்புகிறோம். 

எமது மக்களை பொறுத்தவரையில் நாங்கள் சிறுபான்மையினர் என்ற அடிபடப்பையில் எங்களை பாதுகாத்து கொள்ள எங்கள் இருப்பை உறுதி செய்ய பூரண சுயாட்சி நிர்வாக அமைப்பு தேவை என்பதை கோரி வருகிறோம் அதற்கு தேசிய மக்கள் சாதியின் நிலைப்பாடு என்ன ?

இனப்பிரச்சனை தொடர்பில் தங்களின் தீர்வு என்ன என்பதனை முழு இலங்கை மக்களுக்கும் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் 

ஆதரவு தாருங்கள் பின்னர் பேசி முடிவோம் என எத்தனையோ பேர் கூறி ஏமாற்றிய பின்னரே யுத்தம் ஆரம்பாகி அதனால் பெரும் இழப்புக்களை சந்தித்தோம் 

நாட்டின் உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதில்லை என கூறும் அநுர , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனையை உள்நாட்டில் விசாரிக்கலாம் என கூறுகின்றார் 

உள்நாட்டில் விசாரிக்க தொடங்கினால் நீதித்துறை அழுத்தங்களை சந்திக்க வேண்டும் என நாங்கள் அறிந்தே உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை இல்லை சர்வதேச விசாரணையை கோரி வருகிறோம்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளை தமிழ் மக்கள் பக்கம் இருந்து அநுர தரப்பினர் சிந்திக்க வேண்டும். எங்களுடன் கை கொடுங்கள் என கோரும் போது , ஆக குறைந்த தீர்வையாவது அவர்கள் கூற வேண்டும் என மேலும் தெரிவித்தார் 

No comments