Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சண்டிலிப்பாயில் பொது வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்


யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் றொக் விளையாட்டு கழக மைதானத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் பா. அரியநேந்திரன் ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டமொன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. 

மானிப்பாய் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் லோ.ரமணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான த.சித்தார்த்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் தலைவர் க.சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ்த்தேசிய கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா  ,சனநாயக போரராளிகள் கட்சி தலைவர் வேந்தன் ,  வடக்குமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன்,சமூக செயற்பாட்டாளர் ஏ.செல்வின்,மானிப்பாய் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் அ.ஜோன் ஜிப்பிரிக்கோ, கோப்பாய் பிரதேச சபை முன்னாள் தவிசாளர்  தி.நிரோஸ் ,வடக்குமாகாண கடற்தொழிலாளர் இணைய தலைவரும் தொழிற்சங்கவாதியுமான என்.வி.சுப்பிரமணியம் ஆகியோர் உரையாற்றினார்கள். 

சண்டிலிப்பாய்  பொதுமக்களும் திரளாக கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுவேட்பாளருக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.






No comments