அரசியல் மேடைகளில் நீலிக் கண்ணீர் வடிக்காமல், கடந்த பொருளாதார நெருக்கடியால் மக்கள் வரிசையில் கஷ்டப்பட்ட போது அதனைக் கண்டுகொள்ளாமல் ஓடியதற்காக சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கேகாலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ரணிலால் இயலும் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதிக்கு மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர். பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து, மக்கள் வாழக்கூடிய நாட்டை தானே உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், மக்களின் எதிர்காலத்தை ஒன்று வழங்குமாறு கோரும் அரசியல்வாதிகளுக்கு வழங்கும் சந்தர்ப்பம் இதுவல்ல என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கஷ்டப்பட்டு காப்பாற்றப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு செப்டெம்பர் 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
No comments