Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ் . மாவட்ட செயலரை சந்தித்த தேர்தல் கண்காணிப்பு குழுவினர்


யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ANFREL (Asian Network Free Elections) தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான  மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இச் சந்திப்பில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பாகவும் வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணும் நிலையங்கள் மற்றும் நிறைவுபெற்ற அஞ்சல் வாக்களிப்பின் விபரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இச் சந்திப்பில் ANFREL தேர்தல் கண்காணிப்பு குழுவின் சர்வதேச கண்காணிப்பாளர்  ஹசன் மொகமட் மற்றும் எஸ். கலாராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments