Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ் . பல்கலையில் “சுற்றுலாவும் அமைதியும்"


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்வுகளின் வரிசையாக உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு, “சுற்றுலாவும் அமைதியும்" என்ற தொனிப்பொருளில் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது. 

இந்தியாவின் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து முதல் நாள் ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 8.30  மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் ஆரம்பமாகவுள்ளது. 

செப்டெம்பர் 27ஆம் திகதி ஆரம்பமாகும் நிகழ்வுகள்  29ஆம் திகதி வரையிலான மூன்று நாட்களும் காலை 10 மணி தொடக்கம்  இரவு 9 மணிவரை உணவு மற்றும் கைப்பணிப் பொருள் சந்தை, கலாசாரத்  திருவிழா, மாணவர்களின் உணவுச்சந்தை போன்றன யாழ்ப்பாணப் பல்கலைக்கழக  வாளாகத்தில் இடம்பெறவுள்ளது 

முதலாம் நாள் நிகழ்வு “சுற்றுலாவும் அமைதியும்“ என்ற தொனிப்பொருளில்  ஆய்வரங்காக நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் ஆராத சுருதி உரையினை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் பிறேம குமார டி சில்வா நிகழ்த்தவுள்ளார். 

மற்றுமொரு ஆராதசுருதி உரையினை Jetwing  Symphony குழுமத்தின் தலைவர்  கிரான் குரே நிகழ்த்தவுள்ளார்.

தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடலில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின்  தலைவரும் பேராசிரியருமான சு.ஊ அனு சந்திரன், பாண்டிச்சேரி  பல்கலைக்கழகத்தின் சுற்றுலாத்துறைக் கலாநிதி வெங்கட் ராவோ, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் சமூகவியல் கற்கைகளின்  தலைவர் கலாநிதி பத்மநேசன், Airport and Aviation Service Sri  Lanka தனியார் நிறுவனத்தினுடைய சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல்  துறைத் தலைவர் சிமித் டி சில்வா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.  

இரண்டாம் நாள் நிகழ்வாக இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்த  பேராசிரியர்களால் வடமாகாண சுற்றுலா மற்றும் தொழில் துறை அபிவிருத்தி  உத்தியோகத்தர்களுக்கான தொழில்திறன் மேம்படுத்தல் செயலமர்வுகள்  நடைபெற உள்ளன. 

மூன்றாம் நாள் நிகழ்வுகளாக கலைநிகழ்வுகளும் பண்பாட்டு அமர்வுகளும்  இடம்பெற உள்ளன. 

இந்த நிகழ்வுகளுக்கு சமாந்தரமாக செப்ரம்பர் 27ம் திகதி தொடக்கம்  29ம் திகதி வரையிலான மூன்று நாட்களும்  காலை 10 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை சிறிய நடுத்தர முயற்சியாளர்களை  ஊக்குவிக்கும்  வகையில் கண்காட்சிகளும் சந்தையும் நடைபெற உள்ளன. 

 அத்தோடு இம் மூன்று நாட்களும் மாலை 6 தொடக்கம் இரவு 9 மணி வரை  கைலாசபதி கலையரங்கில் கலைநிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றன. 

இந் நிகழ்வுகளுக்கு அனைவரும்  வருகை தந்து சிறப்பிக்குமாறு யாழ் . பல்கலைக்கழக நிர்வாகம் கோரியுள்ளது. 

No comments