பாணந்துறை பள்ளியமுல்ல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாணந்துறை வடக்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸ் வீதித்தடையில் லொறி ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
அதன் போது, உத்தரவை மீறி சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் லொறியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குறித்த லொறி மாடுகளை ஏற்ற பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments