பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 104 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
அல்லிப்பளை பகுதியில் உள்ள நீர் தேக்கம் ஒன்றிற்கு அருகில் சந்தேகித்திற்கு இடமான முறையில் சில மூடைகள் காணப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் அநாதரவாக கிடந்த மூடைகளை கைப்பற்றி அவற்றை சோதனை செய்தனர்.
அதன் போது அதனுள் இருந்து சுமார் 104 கிலோ கேரளா கஞ்சாவை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பளை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , மீட்கப்பட்ட போதைப்பொருளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்
No comments