Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். விபத்தில் சிக்கிய குடும்ப பெண் உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

தும்பளை மேற்கை சேர்ந்த பிரேமலா கேசவதாஸ் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். 

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்ட போது , வீதியால் மிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவரை மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தில் காயமடைந்தவரை மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பின்னர் மீண்டும் போதனா வைத்தியசாலையில் இருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். 

No comments