மகளிர் துடுப்பாட்ட அணிகளுக்கு இடையிலான மாபெரும் துப்பாட்ட சுற்றுப்போட்டி முதல் முறையாக யாழ்ப்பாணம் ,அரியாலை காசிப்பிள்ளை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது
"Ariyalai Allstars womens cricket league 2024" எனும் பெயரில் எதிர்வரும் 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த சுற்றுப்போட்டியில் 05 அணிகள் மோதவுள்ளன.
இறுதி போட்டி 17ஆம் திகதி இடம்பெறும் எனவும், இறுதி போட்டியில் பிரதம விருந்தினராக யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி மணிவண்ணன் கலந்து கொள்ளவுள்ளார் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments