"வீரர்களின் போர்" என வர்ணிக்கப்படும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக்கும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கும் இடையிலான 2024ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 7ஆம் மற்றும் 08ஆம் திகதிகளில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
யாழ் .ஊடக அமையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இரு கல்லூரிகளின் அணித்தலைவர்களும் , அதிபரும் கலந்து கொண்டு போட்டிகள் தொடர்பில் அறிவித்தனர்.
கடந்த 21 ஆண்டுகளாக நடைபெற்ற இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி அணி ஐந்து முறை வெற்றியீட்டியதுடன், சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி நான்கு முறை வெற்றி ஈட்டியதுடன் 12 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments