கிளிநொச்சியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் பரந்தன் சந்திக்கு அருகில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது
எதிர் எதிரே வந்த இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதிலையே விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments