யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியில் கண்ணாடி சின்னத்தில் முதன்மை வேட்பாளராக ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையில் போட்டியிடவுள்ளதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சிஸ்டம் மாற வேண்டும் என நாட்டு மக்கள் அனைவரும் முடிவெடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுத்துள்ளார்கள் . அதற்கு முன்னதாக சிஸ்டம் மாற வேண்டும் என "அரக்கல" போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் சத்துர சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியில் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். அவ்வாறு மாற்றத்திற்காக போராடியவர்களுடன் கைகோர்த்து யாழ்ப்பாணத்தில் நாங்கள் போட்டியிடுகிறோம் என மேலும் தெரிவித்தார்.
No comments