Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தோற்றுப்போவோம் என்ற அச்சத்தில் எம் மீது சேறு பூசுகின்றனர்


தோற்றுப்போவோம் என்ற அச்சமும், கழ்ப்புணர்ச்சியுமே மீண்டும் எம்மீதான அவதூறுகளை இதர தமிழ் அரசியல் தரப்பினர் கையில் எடுத்து சேறு பூச முற்படுகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பொதுச்சபை உறுப்பினர்கள், வட்டாரக் குழு உறுப்பினர்கள், மற்றும் கட்சி செயற்பாட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் புதன்கிழமை கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

எமது வழிநடத்தலும் அதனை முன்னெடுத்துச் செல்லும் பொறிமுறையும் தான் சரியானது என கடந்த காலங்களில் மக்கள் எமது பாதையை நோக்கி அணிதிரளத் தொடங்கியதை கண்டு அச்சமுற்ற தரப்பினர் அரசியல் ரீதியில் நேருக்கு நேர் நின்று வெற்றிகொள்ள முடியாதுபோன காரணத்தால் எம்மை தோற்கடிப்பதற்காக பல்வேறு அவதூறுகளையும் சேறுபூசல்களையும் வாரி இறைத்தனர்.

அத்தகையவர்களது குறித்த செயற்பாடுகளால் தோற்கடிக்கப்பட்டது எமது மக்களும் மக்களது அபிலாசைகளுமே தவிர நாமல்ல. நாம் என்றும் தனித்துவத்துடன் தடம்மாறாத கொள்ககையுடன் எமது செயற்பாடுகளை மக்களிடம் கொண்டுசென்று வருகின்றோம்.

அதனால்தான் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் மக்கள் என்னை தமது பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு தொடர்ச்சியாக அனுப்பி வருகின்றனர். 

இதேநேரம் தமிழ் மக்களிடம் நீண்டகாலமாக எமக்கு அதிகளாவான நாடாளுமன்ற அரசியல் அதிகாரங்களை தருமாறும் அவ்வாறு கிடைக்கப்பெற்றால் நிச்சயமாக தமிழ் மக்களின் அபிலாசைகள் அனைத்தும் ஈடேறும் என்றும் கூறிவருகின்றேன். ஆனாலும் இதுவரை அந்த அரசியல் பலத்தை தமி்ழ் மக்கள் எம்மை நோக்கி தரவில்லை என்பது கவலையான விடயம்.

தற்போது மாற்றம் வேண்டும் என நீண்டகாலமாக முயற்சித்துவந்த இலங்கை மக்கள் மத்தியில் தற்போது அரசியல் அதிகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதேபோன்று தமிழர் தேசப்பரப்பில் இற்றைநாள்வரை புரையோடிப்போயுள்ள போலித் தேசியத்துக்கும் சுயநல அரசியல் செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ள வைத்து மாற்றத்தை கொண்டுவர தமிழ் மக்கள் நினைக்கின்றனர்.

எம்மிடம் சுயநலமற்ற தடம் மறாதா கொள்கை இருக்கின்றது. அதனை முன்னெடுத்துச் செல்லும் ஆற்றறுலும் சிறந்த தலைமைத்துவ வழிகாட்டலும் இருக்கின்றது இதை கடந்தகால வரலாறுகளே சாட்சிசொல்லும்.

அந்தவகையில் மத்தியில் ஏற்பட்டதைப்போன்று தமிழ் அரசியல் பரப்பிலும் மாற்றத்தை கொண்டுவர மக்கள் தற்போது முயற்சிப்பதை கண்டு குறிப்பாக அந்த மாற்றம் எம்மை நோக்கியதாக இருப்பதை கண்டு அச்சமுற்றுள்ள இதர சுயநல தமிழ் அரசியல் தரப்பினரும் சில இலத்திரனியல் சமூக ஊடகங்களும் மீண்டும் எம்மை நோக்கி தவறான பிரசாரங்களையும் சேறடிப்பகளையும் மேற்கொள்ள முயற்சிக்கின்றனர்.

இதேநேரம் கடந்தகாலங்களில் எம்மை நோக்கி முன்னெடுக்கப்பட்ட சேறுபூசல்களும் அவதூறுகளும் போலியானவை திட்டமிட்டே செய்யப்பட்டன என்றும் அவ போலியானவை என்பதும் நிரூபாணமானது. 

அதேபோன்று தற்போது மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் தமிழ் மக்கள் எம்மிடம் தமது அரசியல் அதிகாரங்களை வழங்கிவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாக மீண்டும் சுயநல தமிழ் அரசியல் தரப்பினர் எம்மை நோக்கி சேறடிப்புகளை செய்ய முயற்சிப்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றும் தான் நம்பவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க

No comments