பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திலும், ஏனைய அரசியல் செயற்பாடுகளிலும் தமிழ்த் தேசிய செயலாற்றுகையை முன்னிறுத்தி, மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுகின்றவர்களிடத்தில் “மாற்றம்” வேண்டும் எனும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை யாழ். தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது.
தமிழ்த் தேசியத்தின் மீது ஆர்வமுடைய, நேரடி அரசியலில் ஈடுபடாத மற்றும் எதிர்வரும் தேர்தலில் ஒரு மாற்றத்தை விரும்புகின்ற பல்வேறு தரப்பிலும் உள்ள ஆர்வலர்களால் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், சமூக ஆர்வலர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள், இளைஞர்கள் யுவதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments