Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்களில் ஆபத்து


இணையவழி ஊடாக விற்கப்படும் சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்கள் மற்றும் லோஷன்களைப் பயன்படுத்தும்போது அதிக கவனம் தேவை என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இணையத்தில் பெண்கள் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களை பயன்படுத்துவதால் பல உடல்நல பிரச்சனைகள் எழுந்துள்ளதாக நுகர்வோர் மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

மேலும், அழகுசாதனப் பொருட்கள் வர்த்தகத்தில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர்,

அதற்கமைய, "சமூக வலைத்தளங்களுக்கு சென்றால் பெண்ணொருவர் வந்து இந்த க்ரீம்களை பயன்படுத்தினால் வெண்மையாகலாம் என்று சொல்கிறார். அதை நாங்கள் விளம்பரமாகவே பார்க்கிறோம்.

அந்த விளம்பரத்தைப் பார்த்தால், அந்த விளம்பரத்தை வெளியிட்டவரின் தொலைபேசி எண் மட்டுமே இருக்கும். சில சந்தர்ப்பங்களில் தொலைபேசி இலக்கம் இல்லை, முகவரி இல்லை. அதிலும் குறிப்பாக சருமத்திற்காக விற்பனை செய்யப்படும் இந்த வகையான பொருட்களை கொண்டு வந்து பயன்படுத்தினால், ஏதேனும் பிரச்சனை என்றால், இந்த பொருளை எந்த நபர் நமக்கு விற்றார் என்று கண்டுபிடிக்க முடியாது.

எனவே, சமூக ஊடகங்கள் மூலம் இதுபோன்ற விடயங்களை முற்பதிவு செய்வதிலும் பெறுவதிலும் நமது பெண்கள் அவதானமாக இருக்க வேண்டும்" என்றார்.

No comments