Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தேசியம் என்பதற்கான அர்த்தம் தெரியாத நிலையில் தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள்


தேசியம் என்பதற்கான அர்த்தம் கூட தெரியாத நிலையில் தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் இருப்பது வெட்கக்கேடானது என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். இவ்விஜயத்தின் போது அவர் தமிழ் கட்சிகளின் உறுப்பினர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். 

குறித்த சந்திப்புக்களின்போது இராஜாங்க செயலாளரால் ஒற்றுமை என்று இதுவரை காலமும் பேசிவிட்டு ஏன் இவ்வாறு பிளவுபட்டு சிறுசிறு குழுக்களாக தேர்தலில் போட்டியிடுகின்றீர்கள்? தேசியம் என்றால் என்ன? போன்ற பல்வேறு வினாக்களை தமிழ் தரப்பினரிடம் எழுப்பியிருந்தார்.

ஆனால் குறித்த தமிழ் அரசியல்வாதிகளால் அவரது கேளிவிக்கு உரிய பதிலை வழங்க முடியவில்லை. குறிப்பாக காலாகாலமாக தேசியம் என்ற சொல்லை திருப்பள்ளி எழுச்சி பாடல் போன்று அதிகாலையிலேயே தேசியத்தை உச்சரிப்பவர்களும் அதற்கான விளக்கத்தை  வழங்கியிருக்கவில்லை. அதுமட்டுமல்லாது அதற்கான அர்த்தமும் அவர்களுக்கு தெரியாது.. 

தமிழ் மக்கள் இவர்களது நிலையை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறான பொறுப்பான கேள்வியை உள்ளூ அரசியல் கட்சிகளோ பிரமுகர்களோ இவர்களை நோக்கி கேட்டால் அவர்களை இந்த தரப்பினர் வசைபாடி வருவதே வழக்கமாக இருந்தது.

இதேநேரம் ஓர் இராஜதந்திரி இவ்வாறு கேட்டபோது அவர்கள் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசியிருக்கின்றார்கள். 13 ஆவது அரசியலமைப்பிற்கும் தேசியத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றதென்று கூட அவர்களால் விளக்கமளிக்க முடியவில்லை.

குறிப்பாக நாட்டையும் பாதுகாத்து எமது மண்ணையும் பாதுகாத்து எமது மொழிமையும் மக்களையும் பாதுகாத்து எமது கலை காலாசாரங்களையும் பாதுகாத்து அதை உறுதிப்படுத்தவதென்பதே தமிழ் தேசியமெனலாம். இதைக்கூட அவர்களால் தெளிவுபடுத்த முடியவில்லை என்பது வெட்கக்கேடான தொன்றாகும்

இவற்றையெல்லாம் உணர்ந்துதான் இன்று புலம்பெறர் தேச உறவுகளும் தாயகத்தில் வாழும் உறவுகளும் இவர்களை ஓரங்கட்டுமாறு கூறிவருகின்றனர்.   .

அதுமட்டுமல்லாது போலித் தேசியவாதிகளின் கருத்துக்களை ஏற்கவேண்டாம் நிராகரியுங்கள் என ஈ.பி.டி.பி நீண்டகாலமாக கூறிவரும்கொரிக்கையையும் ஏற்று அதை வலுவாக்கியுள்ளனர்.

அந்தவகையில் மக்களது தேவைகளை நிறைவுசெய்து கொடும்கும் ஆற்றலும் அக்கறையும் உள்ள கட்சியை இம்முறை ஆதரிக்க வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடாக உள்ளது.

குறிப்பாக அந்த மாற்றம் ஈ.பி.டி.பியை நோக்கியதாகவே இருக்கப்போகின்றது.. அந்த மாற்றத்தை உருவாக்க எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் எமது வீணைச் சின்னத்தை வலுப்படுத்த அமோக ஆதரவினை வழங்க மக்கள் அணிதிரளுவார்கள் என தெரிவித்தார்.

No comments