Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கு கிழக்கு அரசியல் புலத்திலும் மாற்றம் அவசியம்


கடந்த கால தவறுகளிலிருந்து தமிழ் மக்கள் மீண்டெழுந்து நிகழ்காலம் சிறப்பானதாக அமைய ஈ.பி.டி.பியின் வீணை சின்னத்திற்கு ஏகோபித்து வாக்களித்து வடக்கு கிழக்கு அரசியலிலும் மாற்றத்தை கொண்டுவர அணிதிரள வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

tamilnews1 செய்தி குழுமத்தில் இணைந்து கொள்ள இந்த இணைப்புக்கு செல்லுங்கள் 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி பிரதேச வட்டாரக்குழு உறுப்பினர்கள்,  மற்றும் கட்சி செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது

இதன்போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

வாக்குரிமை என்பது மக்கள் ஒவ்வொருவரினதும் ஜனநாயக ஆயுதமாகும். அந்த ஆயுதத்தை தென்னிலங்கை மக்கள் எவ்வாறு பயன்படுத்தி அரசியலில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளார்களோ அதேபோன்றதொரு மாற்றம் வடக்கு கிழக்கு அரசியல் புலத்திலும் அவசியமானதொன்றாகும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான நாள் நெருங்கி வருகின்றது. பலர் பலவாறு கருத்துக்களை கூற முற்படலாம். அவர்களது வெற்று பேச்சுக்களுக்கு மக்கள் மயங்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 

அதேநேரம் அனுபவமுள்ள, அற்றலும்  கொண்ட தலைமையும் கொள்கை மாறாத வழிநடத்தலும் கொண்டு மக்கள் நலனை முன்னிறுத்திவரும் தரப்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே தமிழ் மக்களிடத்தே தனித்துவமாக இருக்கின்றது.

தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காகவும், அரசியல் அவர்கள் தமது அபிலாசகளை வெற்றிகொள்வதற்காகவும் தமது வாக்கு என்னும் ஆயதத்தை, ஈ.பி.டி.பியினரை அரசியல் ரீதியாக வலுச்சேர்க்க அவர்களது வீணை சின்னத்தை நோக்கியதாக பயன்படுத்தி வெற்றிகொள்ளச் செய்வதே காலத்தின் தேவையாகவும் உள்ளது என மேலும் தெரிவித்தார். 





No comments