Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கனடாவில் துப்பாக்கி சூடு - யாழ் . இளைஞன் உயிரிழப்பு


கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிக்கி யாழ்ப்பாணம் மயிலிட்டியை சொந்த இடமாகவும் மார்க்கம், ஒன்ராறியோ, கனடாவில் வசித்து வந்தவருமான பஞ்சலிங்கம் பார்த்தீபன் (வயது-44) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கனடாவின் ஒன்ராறியோ மாநிலம் மார்க்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்று அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர். 

No comments