Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். டெங்கின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம்


யாழ்ப்பாணத்தில் டெங்கின் தாக்கம் குறைவடைந்துள்ளதாகவும், பருவ மழை ஆரம்பித்துள்ளதால் , மீண்டும் டெங்கின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் , மக்கள் வீடுகள் மற்றும் பொது இடங்கள் திணைக்களங்கள் மதத்தலங்கள் என்பவற்றை துப்பரவாக வைத்திருக்க வேண்டும் என யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் கோரியுள்ளார் 

வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

கடந்த ஐந்து வருடங்களைவிட மிகவும் குறைந்தளவான நோயாளர்கள் இந்த வருடம் இனங்காணப்பட்டுள்ளனர். ஐந்து ஆண்டுகளில் கடந்த ஆண்டு யாழ்.மாவட்டத்தில் மிகமோசமான டெங்கு நோய்த் தாக்கம் காணப்பட்டது .

கடந்த ஆண்டு நவம்பர் மற்றும்  டிசெம்பர் மாதங்களில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. கடந்த ஆண்டு டெங்கு நோயால் ஆறு மரணங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில்  179 பேர் நோய்த் தாக்கத்துக்கும் டிசம்பர் மாதத்தில் 2180 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டனர் .

இந்த ஆண்டு ஐனவரி மாதத்தில் 2816 டெங்கு நோய்யாளர்களும் பெப்பிரவரி மரதத்தில் 1409 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பபட்டடனர். அதன் பின்னர் மார்ச் மாதத்துடன் டெங்கு நோய்த் தாக்கம் படிப்படியாகக் குறைந்துள்ளது.  

தற்போது பருவப்பொயர்ச்சி மழை ஆரம்பமாகி உள்ளதால் டெங்கு நோய்த்தாக்கம் மீண்டும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

ஆகவே வீடுகள், அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், மத வழிபாட்டிடங்கள்  மற்றும் அனைத்துப் பொது இடங்களையும் துப்பரவாக வைத்திருத்தல் வேண்டும்.

டெங்கு விழிப்புணர்வு தொடர்பாக முறையான வேலைத்திட்டங்களை அடிப்படையில் செயற்படுத்த வேண்டும். ஒவ்வெரு வாரமும் மதத்தலங்கள் மற்றும் பொது இடங்கள் சிரமதானம் செய்வதன் ஊடாகச் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும்.

டெங்கு நோய்ப் பரவல் காலை வேளையில் 6 தொடக்கம் 9 மணி வரையான காலப்பகுதியிலும் மாலை வேளையில் 3 தொடக்கம் 6 மணிவரையான  காலப்பகுதியிலும் கடிக்கும் நுளம்புகளால் அதிகம்  நோய்த்தாக்கம் ஏற்படுகிறது என மேலும் தெரிவித்தார்

No comments