பனை அபிவிருத்தி சபையின் "பனை பொருள்சார் ஏற்றுமதியாளர்களுடானான கலந்துரையாடல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
யாழ்.கைதடியில் அமைந்துள்ள வடமாகாண பிரதமர் செயலக கோட்போர் கூடத்தில், பனை அபிவிருத்தி சபையின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இந்தியா துணைத் தூதர் ஸ்ரீ சாய் முரளி, வட மாகாண பிரதம செயலர் எல். இளங்கோவன், யாழ். மாவட்ட அரசு அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வவுனியா பல்கலைக்கழக வேந்தர் சுப்பிரமணியம் மோகனதாஸ், அரச அதிகாரிகள், பனை பொருள்சார் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments