Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சீன தமிழ் மக்களை தொடர்ந்து வஞ்சித்தே வருகிறது


இறுதி யுத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட  உறவுகளுக்கு என்ன நடந்தது என உறவுகள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் அதற்கான  சர்வதேச நீதியைப் பெறுவதற்கு சீனா தடையாக அமைவதாக  வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கபட்ட சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா குற்றஞ்சாட்டினார்.

யாழ் மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்த சீன தூதுவர் தமிழ் மக்களின் தீர்வு மற்றும் காணமாலாக்கபட்டோர் தொடர்பாக  சீனதூதுவர் கருத்து தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

சீனதூதுவரின் வருகையின் பொழுதான கருத்திற்கு முற்றாக எதிர்ப்பை தெரிவிக்கின்றேன் .

தேசிய மக்கள் சக்திக்கு வாக்கு வீழ்ந்தது உண்மை .ஏற்கனவே முன்பிருந்த அரச சார்பான கட்சிக்கு வீழ்ந்தவை தான் இப்பொழுது தேசிய மக்கள் சக்திக்கு வீழ்ந்துள்ளது. அதனை அனுரகுமார அரசாங்கத்தினை முற்று முழுதாக ஏற்றுகொண்டு வாக்களித்தது என்றும் கூறமுடியாது. விட அதிகளவு வாக்கினை பெற்றுள்ளார்கள்.

ஆடு அழுகின்றது என ஓநாய் வெம்பி அழுத கதை தான் சீனதூதுவரின் கதை மீது எனக்கு வருகின்றது.

இந்த காணாமலாக்காபட்டவரின் பிரச்சினைக்கு எப்பொழுதோ தீர்வு கிடைத்திருக்கும் .கடந்த அரசாங்கங்கள் இருக்கின்ற பொழுது அதனை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொடுப்பதற்கு பல நாடுகள் தயாராக இருந்தும் சீனாக்கு அங்குள்ள வீற்றோ பவர் காரணமாக தான் இந்த விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுபோகபடவில்லை. 

ஏன் என்றால் வெளிப்படையாகவே சொல்லுகின்றார்கள் காணாமலாக்கபட்டவரின் பிரச்சினையை கொண்டு சென்றால் சீனா இலங்கைக்கு ஆதரவாக வீற்றோ அதிகாரத்தை பாவிக்கும் என்கின்றார்கள். 

அதே போல இறுதி கட்ட யுத்தத்தின் பொழுதும் சீனா பொஸ்பரஸ் குண்டுகளை கொடுத்து தமிழ் மக்களை கொல்வதற்கு முக்கால்வாசி அவர்கள் தான் பொறுப்பாளிகள் .

இவாறாக தங்கள் சுயலாபத்தினை பெறுவதற்கு தமிழ்மக்களை வஞ்சித்து கொண்ட இருக்கின்றார்கள் என மேலும் தெரிவித்தார்.

No comments