இந்த வருடத்தில் இதுவரையிலான கால பகுதிக்குள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 497 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
அதேவேளை கைது செய்யப்பட்டுள்ள தமிழக கடற்தொழிலாளர்களின், 66 படகுகளை பறிமுதல் செய்துள்ளதாகவும், இலங்கை கடற்தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கடற்படை அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் என மேலும் தெரிவித்தார்.
No comments