கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கண்காணிப்பு விஜயமொன்றை இன்றைய தினம் மேற்கொண்டிருந்தார்.
கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் ஆகியோருடன் அசாதாரண காலநிலை காரணமாக அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.
இதன்போது அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் தற்காலிக நிவாரண நிலையங்கள் சிலவற்றை பார்வையிட்ட அவர், அங்குள்ள நலன்புரி ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
மேலும் வெள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பாகவும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
தங்கவைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் அவர்களுக்கான அத்தியவசிய நிவாரணப் பொருட்கள் சிலவற்றை வழங்கி வைத்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 12 இடைத்தங்கல் முகாம்களில் 311 குடும்பங்களைச் சேர்ந்த 912 அங்கத்தவர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவுகள், சுகாதார வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments