Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஜெனரல் சவேந்திர சில்வா ஓய்வு


ஜெனரல் சவேந்திர சில்வா, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும்  இலங்கை இராணுவ செயற்பாட்டு சேவையில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

4 தசாப்தங்களாக இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, 2020 ஜனவரி 1 ஆம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக சேவையாற்றினார்.

இவர் இலங்கை இராணுவத்தில் தியத்தலாவவிலுள்ள இலங்கை இராணுவ பீடத்தில்  19 ஆவது அதிகாரி கேடட் ஆட்சேர்ப்பு பாடநெறியில்  1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி சேர்ந்தார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி இராணுவத் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மே 31, 2022 வரை அந்தப் பதவியில் பணியாற்றினார்.

அதன் பிறகு, அவர் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாகி நான்கு ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றினார்.

 முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் கீழ் அவர் செயற்பட்டிருந்தார்.

 


No comments