Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பயங்கரவாத தடை சட்டத்தை உடன் நீக்குங்கள்


ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை நசுக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

 பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடக வேட்டையில் ஈடுபடுவது நியாயமா? இவ்வளவு பெரிய ஆணையைப் பெறுவதற்கு சமூக ஊடகத் துறையிலிருந்து உங்களுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. 

ஆனால் இந்த நேரத்தில் இந்த சமூக ஊடக ஆர்வலர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி வேட்டையாடப்படுகிறார்கள். 

நீக்கப்படும் என்று கூறப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தை நிறுத்துங்கள்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உர மானிய விடயத்தில் இடம்பெறும் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரணிலின் பாதையில் பயணிக்காது தேர்தல் மேடையில் கூறியவற்றை நடைமுறைப்படுத்துமாறும் மேலும் தெரிவித்தார்.

No comments