களுத்துறை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இளைஞர்கள் குழுவொன்றிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த ஹோட்டலின் நிர்வாக அதிகாரி ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,
களுத்துறை, கட்டுகுருந்த பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதிக்கு முன்பாக உள்ள கடற்கரை பகுதியில் இளைஞர்கள் குழுவொன்று மது அருந்திக்கொண்டிருந்துள்ள நிலையில் விடுதியின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, இந்த இளைஞர்கள் குழுவினரால் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
இளைஞர்கள் குழுவை கட்டுப்படுத்துவதற்காக ஹோட்டலின் நிர்வாக அதிகாரி ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் யாருக்கும் எந்தவித காயஙி்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தையடுத்து, இந்த இளைஞர்கள் குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
No comments