Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கைதடி சைவ ஐக்கிய சங்கத்தில் ஆறுமுகநாவலரின் விழா


சைவத்துக்கும், தமிழுக்கும் தொண்டாற்றுவதற்காக கைதடியில் 100ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட கைதடி சைவ ஐக்கிய சங்கமானது அண்மையில் நூற்றாண்டு விழாவினை நடத்தி இருந்தது.

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்தும், மேலதிக வேலைகள் வேறு சில நலன்விரும்பிகளின் நிதியிலிருந்தும் கைதடி சைவ ஐக்கிய சங்கத்தின் கட்டடம் புனரமைப்பு செய்யப்பட்டது.

புனரமைப்பின் பின்னராக முதலாவது நிகழ்வாக ஆறுமுகநாவலரின் விழாவினை இம்முறை முதல் தடவையாக கைதடி சைவ ஐக்கிய சங்கத்தின் மண்டபத்தில் குறுகிய கால ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆசியுரை வழங்குவதற்காக சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகனும், முதன்மை அழைப்பாளராக பேராசியரும் மருத்துவ நிபுணருமான தம்பிப்பிள்ளை தவச்சேந்தனும் , சிறப்பு அழைப்பாளராக சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திருமதி நிரஞ்சன் கலைவாணியும், கைதடி சைவ ஐக்கிய சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள், போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் விழாவில் பங்குபற்றிருந்தனர்.

இவ்விழாவுக்கான அனுசரணையினை பேராசியரும், மருத்துவ நிபுணருமான திரு.த.தவச்சேந்தன் வழங்கி இருந்தார்.





No comments