Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தென்னமரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிட நடவடிக்கை


முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பிரதேசத்தின் தென்னமரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிடுவதற்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் கட்ட களப்பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் UN-HABITAT நிறுவனத்தால்  Adaptation Fund நிதி உதவியுடன் சுற்றாடல் அமைச்சு, மாவட்ட சமூகம் சார்ந்த அமைப்புகள் ஊடாக இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் காலநிலை மாற்றம் மற்றும் கால நிலை மாறுபாட்டை தாங்கும் தன்மை எனும் தலைப்பில் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக நீண்ட காலமாக புரனமைக்காது காணப்படும்  முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பிரதேசத்தின் தென்னமரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிடுவதற்காக முதல் கட்ட களப்பயணத்தை மாவட்ட செயலகப் பிரதிநிதிகள்,UN-HABITAT பிரதிநிதிகள், வன வள திணைக்கள பிரதிநிதிகள்,கமநல சேவை திணைக்கள பிரதிநிதிகள்,விவசாய போதனாசிரியர்  கமக்கார அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகள் ஆகியோர் இணைந்து மேற்கொண்டார்கள்.

இந்த களப்பயணத்தின் போது கலந்து கொண்ட விவசாயி கருத்து தெரிவிக்கையில் 

நீண்ட காலமாக புனரமைக்காது காணப்படும் இவ் வீதியை நம்பி 850 ஏக்கரில் நெல் செய்கை மேற்கொள்ளப்படுகிறது.  இவ் வீதி சீராகும் பட்சத்தில் அதிக ஏக்கரில் பயிர் செய்யும் வாய்ப்பு உள்ளது 

அத்துடன், இவ் வீதியை புனரமைப்பதால் 250 விவசாய குடும்பங்களின் வாழ்வு ஓளிமயமாகும் என தெரிவித்தார். 





No comments