Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பொருத்தமான துறைகளை தெரிவு செய்வதன் ஊடாக வேலை வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும்.


வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ். கல்விக் கண்காட்சி – 2025 திறப்பு விழா இன்று சனிக்கிழமை யாழில் உள்ள தனியார் விடுதியில்  நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகவும் , சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவனும், கௌரவ விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும் கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர். 

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

முன்னைய காலத்தில் இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் குறிப்பிட்ட தொகையானவர்களுக்கு மாத்திரமே உயர்கல்விக்கான வாய்ப்பு இருந்தது. தற்போது அரச பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களும் உயர்கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பு பரந்தளவில் கிடைக்கின்றன.  அதனைச் சரிவரப் பயன்படுத்தவேண்டும் 

அத்துடன் எமது முயற்சி மற்றும் தேடலில்தான் உயர்கல்வித் தெரிவு இருக்கின்றது. பொருத்தமான துறைகளை தெரிவு செய்வதன் ஊடாக வேலை வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும். 

வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி ஆகும்.  இவ்வாறான கல்விக் கண்காட்சிகள் எமது மாகாண மாணவர்களின் எதிர்காலத்துக்கு சிறப்பானவை, இவை தொடரவேண்டும் என மேலும் தெரிவித்தார். 








No comments