அநுராதபுரத்தின் பல பகுதிகளில் இருந்து காட்டு யானைகளை வில்பத்து வரை விரட்டுவதற்கு GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, காட்டு யானைகளுக்கு GPS தொழில்நுட்பம் கொண்ட கழுத்துப் பட்டிகளை அணியும் நடவடிக்கை ஒயாமடுவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை வனவிலங்கு அதிகாரிகள், இலங்கை கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முன்னெடுத்து வருகின்றார்.
காட்டு யானைகள் நடமாடும் இடங்களை கண்டறிந்து அவற்றின் வழித்தடங்களை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments