Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஒரேயொரு பரீட்சாத்தி 188 என்ற அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளார்


புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் ஒரேயொரு பரீட்சாத்தி 188 என்ற அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளார். 16.05 சதவீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தில் இன்றைய தினம்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலையே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

16.05 சதவீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். கடந்த ஆண்டு 15.22 சதவீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றிருந்தனர். 77.96 சதவீதமான மாணவர்கள் 70க்கும் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

37.70 சதவீதமானோர் நூறுக்கும் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். எனினும் கடந்த ஆண்டு 45 சதவீதமான மாணவர்கள் நூறுக்கும் அதிக புள்ளிகளைப் பெற்றிருந்தனர். அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 18 மாணவர்களில் 11 மாணவர்களும், 7 மாணவிகளும் உள்ளடங்குகின்றனர். மேலும் 140 மாணவர்கள் முதல் நூறு இடங்களைப் பிடித்துள்ளனர். இவர்களில் மாணவர்கள் 76 பேரும், 64 மாணவிகளும் உள்ளடங்குகின்றனர்.

51,244 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் 15.02 சதவீதமானவர்கள் ஆண் மாணவர்களாவர். 17.10 சதவீதமானோர் மாணவிகளாவர். வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றதன் அடிப்படையில் சப்ரகமுவ மாகாணம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தென் மாகாணம் இரண்டாவது இடத்தையும், ஊவா மாகாணம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

இரத்தினபுரி, குருணாகல், யாழ்ப்பாணம், மொனராகலை, கேகாலை, பதுளை, மாத்தறை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். நாடளாவிய ரீதியில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் தொடர்பான பெயர் பட்டியலை வெளியிடுவதில்லை என கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் 188 என்ற அதிகூடிய புள்ளியை ஒருவர் பெற்றுள்ளார்.

வெளியானதாகக் கூறப்பட்ட 3 வினாக்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் புள்ளிகள் வழங்கப்பட்ட போதிலும், அதன் மூலம் அதிக கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் பலன் பெறவில்லை. காரணம் அவர்கள் குறித்த மூன்று வினாக்களுக்கும் சரியான பதில்களையே அளித்திருந்தனர். எனவே 3 புள்ளிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தால் பாரிய பாதிப்புக்கள் எவையும் இல்லை என்றார். 

No comments