ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகப் போற்றப்படும் கீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வர சுவாமி ஆலயத்தில் இன்றைய தினம் புதன்கிழமை மகா சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
விசேட அபிஷேகம் பூசைகளுடன் ஆரம்பமாகித் தொடர்ந்து நான்கு சாமப் பூசைகளும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
நள்ளிரவு-12 மணிக்கு லிங்கோற்பவ காலச் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூசை வழிபாடுகளும், பஞ்சமுக அர்ச்சனை உள்ளிட்ட சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளது.
No comments