வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை .பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கையின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு வளிமண்டலத்தில் உறுதியற்ற தன்மை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்







No comments