சட்டவிரோதமாக குடியேறிய 116 இந்தியர்களை ஏற்றிச் சென்ற மற்றொரு அமெரிக்க இராணுவ விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு தரையிறங்கியது.
சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் இரண்டாவது தொகுதி இதுவாகும்.
குடியேற்றம், சரிபார்ப்பு மற்றும் பின்னணி சரிபார்ப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர், நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
116 நாடுகடத்தப்பட்டவர்களின் பட்டியலின்படி, அவர்களில் 60 க்கும் மேற்பட்டவர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்டவர்கள் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள்.
ஏனையவர்கள் குஜராத், உத்தரபிரதேசம், கோவா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவார்கள்.
No comments