யாழ். மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க உத்தியோகபூர்வ அனுமதியை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வழங்கினார்.
இரண்டு வாரமாக நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி, மேலும் யாழ். மாவட்டத்திலும் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டதிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
No comments